கோவையில் வெடிகுண்டு மிரட்டல்; பரபரப்பை ஏற்படுத்திய இமெயில் - காவல் ஆணையர் விளக்கம்!
கோவையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் குண்டு மிரட்டல்
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து இமெயில் ஒன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்ததாக செய்திகள் வெளியாகின.
அந்த இமெயிலில் பாஜக அலுவலகம் உள்ளிட்ட பல இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து கோவை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
பாதுகாப்பு அதிகரிப்பு
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் கோவை மாநகர ஆணையர் "கோவையில் வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் ஒன்று வந்தது. அது தொடர்பாக விசாரித்தபோது, அது வதந்தி என்பது தெரியவந்தது.
அதனால், தனிப்பட்ட முறையில் காவல்துறை பாதுகாப்பு அதிகப்படுத்தவில்லை. தீபாவளிக்கு வழக்கமாக வழங்கக்கூடிய பாதுகாப்பை மட்டுமே அதிகரித்திருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.