இரு மதத்தில் மனைவிகள்; கணவர் உடலுக்கு இறுதிசடங்கில் தகராறு - நீதிமன்றம் உத்தரவு!

Death Sivagangai
By Sumathi Feb 20, 2024 05:51 AM GMT
Report

இறந்த கணவரின் உடலுக்கு இரு மனைவிகளின் மத முறைப்படி இறுதிசடங்கு செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

கணவர் இறுதிசடங்கு 

காரைக்குடியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (எ) அன்வர் உசேன் (55). அரசு பேருந்து ஓட்டுனராக இருந்து வந்தார். இவர் மதம் மாறி சையத் அலி பாத்திமா என்னும் இஸ்லாமிய பெண்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இரு மதத்தில் மனைவிகள்; கணவர் உடலுக்கு இறுதிசடங்கில் தகராறு - நீதிமன்றம் உத்தரவு! | Dead Husband Married Hindu Muslim Women Case

இவருக்கு ஏற்கனவே சாந்தி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி ஒரு மகளும் இருக்கிறார். இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டினால் நீதிமன்றத்தில் விவாகரத்து வழங்க கோரி தாக்கல் செய்த நிலையில் மனைவி ஏதிர்த்ததால் விவகாரத்து ரத்தானது.

பணம் இல்ல; மொழி தெரியல - 115கி.மீ இறந்த மனைவியை தோளில் சுமந்து சென்ற கணவன்

பணம் இல்ல; மொழி தெரியல - 115கி.மீ இறந்த மனைவியை தோளில் சுமந்து சென்ற கணவன்

நீதிமன்றம் உத்தரவு

பின் பிரிந்து இருந்த அவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

supreme court of india

தொடர்ந்து, இறந்த உடலுக்கு இரண்டாம் மனைவி தகனம் செய்ய ஏற்பாடு செய்திருந்தபோது அங்கு வந்த முதல் மனைவி அவரது இந்து முறைப்படி சடங்கு செய்ய வேண்டும் என போலீசாரிடம் புராகரளித்தார்.

பின் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது. இதனையடுத்து, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இறந்த கணவரின் உடலுக்கு இந்து மத முறைப்படி சடங்கு செய்து, இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய உத்தரவிட்டார்.