தீராத சளியால் மகன் அவதி!.. அழகிய மனைவி, பிள்ளைகளுடன் கணவனும் தற்கொலை

mother suicide Nagercoil
By Jon Feb 16, 2021 02:59 PM GMT
Report

தமிழகத்தில் மனைவி, பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கணவன் தானும் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. நாகர்கோவில் அருகே சூரங்குடியை அடுத்துள்ள சுண்டப்பற்றிவிளையை சேர்ந்தவர் கண்ணன்(42). மரதச்சு தொழிலாளியான இவரது மனைவி சரஸ்வதி(38).

இவர்களுக்கு அனுஷ்கா(11), விகாஷ்(5) என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இதில் விகாசுக்கு பிறந்ததில் இருந்தே சளி மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சனை இருந்து வந்தது, பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் விகாசுக்கு குணமாகவில்லை. மகன் கஷ்டப்படுவதை பார்த்து கண்ணனும், சரஸ்வதியும் மனவேதனையில் துடித்துள்ளனர், இதற்கிடையே மகனின் மருத்துவ செலவுக்கு அதிகமாக கடன் வாங்கியதால் சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது.

எனவே குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள கண்ணன் முடிவெடுத்தார், இதன்படி நேற்றிரவு தூங்கச் செல்லும் முன் மனைவி, பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துள்ளார். தொடர்ந்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இன்று காலை வெகுநேரமாக வீடு திறக்காததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் அங்கே சென்று பார்த்துள்ளனர். அப்போது 4 பேரும் இறந்து கிடப்படை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர், விரைந்து வந்த அதிகாரிகள் நால்வரின் சடலங்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Gallery