காதலின் பிரிவு குறித்து உருக்கமாக பேசிய டிடி - தீயாய் பரவும் வீடியோ!
காதலர் தின வாழ்த்துக்கள் கூறி, பிரிவு குறித்து டிடி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
டிடி
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ளார். டிடிக்கு திருமணமாகி விவாகரத்தானது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், காதலர் தினத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், காதலில் நல்லா போய்க்கிட்டு இருக்கும். திடீர்னு ஒரு நாள் அது எல்லாம் தவறு என்று ஆகி நம்ம கிட்ட பேச மாட்டாங்க, நமக்கு மெசேஜ் பண்ண மாட்டாங்க, கால் பண்ண மாட்டாங்க, ஒரு நாள் அப்படியே நம்மள ஹோல்ட் பண்ணி விடுவாங்க. நாம எப்பவுமே என்ன நினைப்போம்னா நாம என்ன தப்பு செஞ்சோம்? என்ன நடந்தது? அந்த நாள் வரைக்கும் கரெக்டா தான போய்கிட்டு இருந்தது.
உருக்கம்
ஆனா அப்போ அந்த நாள்ல நான் என்ன செஞ்சது அவங்களுக்கு தப்பா போயிருக்கும்? இல்லனா நான் ஏதாவது சொல்லனும்னு நெனச்சது தப்பா போயிட்டா? என்று நம்ம என்ன பேசணும்? என்ன செஞ்சோம்? என்று என்ன? என்ன? வென திருப்பி திருப்பி அந்த நாளை நாம நினைச்சுக்கிட்டே இருப்போம். அந்த நாளில் என்ன தப்பு நம்ம மேல இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக நாம ட்ரை பண்ணுவோம்.
ஆனா இது சரியான தீர்வு அல்ல, அவங்க உங்கள லவ் பண்ண முடியாத காரணத்தினால் தான் அவங்க நம்ம கிட்ட இருந்து விலகிப் போய் இருப்பாங்க. தவிர உண்மையிலேயே நம்ம மேல தப்பு இருக்காது. அப்படி ஏதாவது தப்பு இருந்திருந்தால் அவங்க நம்ம கிட்ட சொல்லி இருப்பாங்க.
அவங்க திடீர்னு ஒரு நாள் நம்மகிட்ட இருந்து மாயமா மறையும் போது, ப்ளீஸ் நீங்க உங்களுடைய சுய அறிவை திறந்து பாருங்க. காதல் என்பது நிஜமா நடக்கணும் என்று இருந்தால் அது இயல்பா இனிமையா நடக்கனும். நாம் நம்மளை மீண்டும் மீண்டும் அவங்க கிட்ட நிரூபிக்க வேண்டாம் எனப் பகிர்ந்துள்ளார்.