டிடி கிட்ட ஜோடி செட்டில் லவ் சொல்ல போனேன் - ஆனா!! நீண்ட காலம் பிறகு போட்டுடைத்த பிரபலம்

Karthick
in பிரபலங்கள்Report this article
சின்னத்திரையில் தொகுப்பாளர்களில் முக்கியமான இடத்தில் இருக்கிறார் திவ்யதர்ஷினி.
திவ்யதர்ஷினி
தமிழ் சின்னத்திரையில் மிக பிரபலமான தொகுப்பாளர் என்றால் திவ்யதர்ஷினியை தான் பலரும் குறிப்பிடுவார்கள். தற்போது பிரபலமாக இருக்கும் அனைவருக்குமே முன்னோடியாக இருப்பவர் திவ்யதர்ஷினி.
விஜய் டிவி தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் பெரும் ஹிட்டித்த நிகழ்ச்சிகளாக அமைந்தது. அதனை தொடர்ந்து படங்களிலும் நடிக்க துவங்கினார் திவ்யதர்ஷினி. மலையாள நடிகர் டோவினோ தாமஸ் ஜோடியாக ஆல்பம் பாடல் ஒன்றிலும் அவர் நடித்துள்ளார்.
இவருக்கு 2014-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவருடன் திருமணம் நடந்து அது விவாகரத்தில் முடிந்தது. அண்மையில் விபத்தில் ஒன்று சிக்கி மீண்டு வந்த டிடி மீண்டும் நிகழ்ச்சிகளில் மும்முரம் காட்ட துவங்கியுள்ளார்.
கிரஷ்
இந்த சூழலில் தான் பிரபல தொகுப்பாளர் ஒருவர் தனக்கு டிடி கிரஷ்-ஆக இருந்தார் என கூறியுள்ளார். விஜே ரமேஷ் நல்லாயன் சமீபத்தில் அளித்த பேட்டியில், டிடி எனக்கு ஆரம்பத்தில் இன்ஸ்ப்ரேஷனாக இருந்தார்கள்.அவருக்கும் எனக்கும் நல்ல நட்பு இருந்தது.
போகப்போக கிரஷ்-ஆக மாறினார். ஆனால், டிடியிடம் கூற பயம், எப்படி எடுத்துப்பார்கள் என்பதால் சொல்லவில்லை. இருப்பினும், காதலை சொல்லலாம் என்று ஜோடி செட்டிற்கு சென்ற போது டிடி நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, கடைசி வரை சொல்லவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.