மதியம் சாப்பிட்டதும் குட்டி தூக்கம்; இவ்வளவு தான் நல்லதாம் - ஆய்வில் முக்கிய தகவல்..!

London
By Sumathi Jul 04, 2023 10:27 AM GMT
Report

பகலில் தூங்குவது தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

பகல் தூக்கம்

பகலில் தூங்குவது நல்லதா, கெட்டதா என்பதில் பலரிடையே குழப்பம் உள்ளது. அதில் பெரும்பாலானோர் பகல் தூக்கத்தை நல்லதல்ல என்றே நம்புகின்றனர். சமீபத்தில் லண்டன் பல்கலைக்கழக ஆய்வகம் இதுகுறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது.

மதியம் சாப்பிட்டதும் குட்டி தூக்கம்; இவ்வளவு தான் நல்லதாம் - ஆய்வில் முக்கிய தகவல்..! | Daytime Naps Boost Your Brain Health

டி.என்.ஏ.வில் உள்ள 97 துணுக்குகள், நம்மை தூங்குபவர்களாகவோ அல்லது சுறுசுறுப்பானவர்களாகவோ செயல்பட வைக்கும். அதனை வைத்து 40 முதல், 69 வயதுள்ள 35,000 நபர்களிடம் மரபணுச் சோதனையை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.

நல்லதா? கெட்டதா?

அதில், பிற்பகலில் தூங்குபவர்களின் மூளை பெரிதாவதைக் கண்டறியப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் 20- 30 நிமிடங்கள் வரை உறங்குவதுதான் உடலுக்கு நல்லது என்பதும் இதில் தெரிய வந்துள்ளது. தூங்காதவர்களை விட பகலில் சிறிது நேரம் உறங்குபவர்களின் வயது 2.6 முதல், 6.5 வருட வயது முதிர்வைக் குறைக்கிறது.

மதியம் சாப்பிட்டதும் குட்டி தூக்கம்; இவ்வளவு தான் நல்லதாம் - ஆய்வில் முக்கிய தகவல்..! | Daytime Naps Boost Your Brain Health

உடல் எடையைக் குறைப்பது, உடற்பயிற்சி செய்வதைவிட, பகல் நேரத்தில் சிறிது உறங்குவது ஏராளமான பலன்களைத் தரும். சரியான நேரத்திற்கு உறங்குவதன் மூலம், வயது முதிர்வால் ஏற்படும் முழு மறதி நோயை தவிர்க்கலாம்.

தூக்கமின்மை, சரியான நேரத்திற்கு உறங்காமலிருப்பது போன்றவை, மூளையின் செயல்பாட்டைச் சிதைப்பதோடு மட்டுமில்லாமல் மூளை செல்களையும் பாதிக்கும்.