உதை வாங்கப் போற.. உக்கார்ரா..கொந்தளித்த தயாநிதிமாறன் - சாடிய பாஜக நிர்வாகி!

Dayanidhi Maran
By Sumathi Sep 22, 2023 04:12 AM GMT
Report

தயாநிதிமாறன் பேச்சுக்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தயாநிதிமாறன் பேச்சு

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, திமுக தரப்பில் ஆ.ராசா பேச எழுந்து, "என்னை லோக்சபாவில் பேச அழைத்ததற்கு நன்றி" என்று கூறி உரையை ஆரம்பித்தார்.

உதை வாங்கப் போற.. உக்கார்ரா..கொந்தளித்த தயாநிதிமாறன் - சாடிய பாஜக நிர்வாகி! | Dayanidhi Maran Mp Angry And Shouted At An Bjp Mp

அப்போது, எதிர்வரிசையில் அமர்ந்திருந்த பாஜக எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பி தொந்தரவு செய்தனர். இதனால் தயாநிதி மாறன் எழுந்து, 'உதை வாங்கப் போற நீ, டேய் உக்கார்டா, என்னா என்னா பேசுற ?" என்று கேட்டார்.

பாஜக நிர்வாகி கண்டனம்

தொடர்ந்து கோஷங்கள் கேட்டுக்கொண்டே இருந்த நிலையில், டேய் உக்காருடா.. என்ன என்னா.."என்னய்யா.. என்னய்யா.. நீ மந்திரிதானே.. நீ மந்திரிதானே" என்று கேட்டார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பான வீடியோவை பதிவிட்டு பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி, "டேய்!! டேய் ..... உதை வாங்கப் போற நீ.... டேய்..உக்கார்டா...... ஆ.... ஊன்னா... என்னா.....என்னா...... " இந்த வார்த்தைகளை பேசியது, தெரு சண்டையில், 'ரவுடி பட்டியலில்' இருக்கும் நபர் அல்ல.

முன்னாள் மத்திய அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன். பேசியது இன்று புதிய பாராளுமன்றத்தில். தமிழை, தமிழனை, தமிழகத்தை தலை குனிய வைத்த தி மு க. இந்த நபர் பாராளுமன்றத்தில் இருக்க தகுதியற்றவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.