தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தீபாவளிக்கு மறுநாள் தமிழ்நாட்டில் அரசு விடுமுறை அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தீபாவளி
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வெளியூரில் வேலைப்பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு சென்று குடும்படுத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடுவர்.
இந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மறுநாள், வெள்ளிக்கிழமை வேலை நாளாக இருப்பதால் சொந்த ஊருக்கு செல்பவர்கள் அன்றைய தினம் இரவே கிளம்ப வேண்டிய நிலை உள்ளது.
அரசு விடுமுறை
மறுநாள் வெள்ளிக்கிழமை (01.11.2024) விடுமுறை கிடைத்தால் அடுத்த வரும் சனி, ஞாயிறு சேர்த்து மொத்தம் 4 நாட்கள் தீபாவளிக்கு விடுமுறை கிடைக்கும். இதனால் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், மக்களின் நலனை கருத்தில் கொண்டு வெள்ளிக்கிழமை (01.11.2024) தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் விதமாக 09.11.2024 அன்று பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.