33 வயது தான்...சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள இங்கிலாந்து சிஎஸ்கே வீரர்!!
இங்கிலாந்து அணியை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான டேவிட் வில்லி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளது அறிவித்துள்ளார்.
டேவிட் வில்லி
2015-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியில் அறிமுகமான 33 வயதான டேவிட் வில்லி, அதன் பின்னர் தொடர்ந்து 70 ஒரு நாள் போட்டிகளிலும், 43 T20I போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 50 ஓவர் போட்டியில் 30.3 சராசரியுடன் 627 ரன்கள் குவித்துள்ள டேவிட் வில்லி, 5.57 என்ற எக்கானமியில் 94 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கின்றார்.
T20I போட்டியில் 23.1 சராசரியுடன் 226 ரன்களையும் 8.18 எக்கானமியில் 51 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் டேவிட் வில்லி. கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இவர், பின்னர் 2020-ஆம் விடுவிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு அணியில் 2022 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டார்.
ஓய்வு அறிவிப்பு
இந்நிலையில், தற்போது உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த நாள் வருவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை. சிறுவயதில் இருந்தே நான் இங்கிலாந்துக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று மட்டுமே கனவு கண்டேன். கவனமாகக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளேன், அனைத்து வடிவங்களிலிருந்தும் நான் ஓய்வுபெறும் நேரம் வந்துவிட்டது என்பதை மிகவும் வருத்தத்துடன் உணர்கிறேன்.
— David Willey (@david_willey) November 1, 2023
உலகக் கோப்பையின் முடிவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்துள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, இது வரை தற்போதைய உலகக்கோப்பை போட்டியில் 6 போட்டிகளில் விளையாடி அதில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.