கடைசி டெஸ்ட்டிலும் அரைசதம் - கண்ணீருடன் ஓய்வு பெற்ற டேவிட் வார்னர் - புதிய அவதாரம்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற்றுள்ளார்.
டேவிட் வார்னர்
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி துவக்க வீரர் டேவிட் வார்னர். 2009ல் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். 2011ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி தற்போது, நடைபெற்று வரும் பாகிஸ்தான் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
அதன்படி தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் முறைப்படி ஓய்வு பெற்றார்.
புதிய அவதாரம்
இதில், தனது 37வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக 112 போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ள அவர் 8786 ரன்களை குவித்துள்ளார். தனது ஒய்வை அறிவித்தபின் பேசிய அவர்,
One final time.#AUSvPAK pic.twitter.com/gbD9Fv28h8
— cricket.com.au (@cricketcomau) January 6, 2024
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது வர்ணனையாளராக செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.