ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் போட்ட வார்னர் - ஆஸ்திரேலியாவிலும் எதிரொலித்த ராமர் கும்பாபிஷேகம்..!
நேற்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது உலகளவில் பெரும் செய்தியாக மாறியது.
ராமர் கோவில்
நாட்டின் பிரதமர் கலந்து கொள்கிறார் என்பதை தாண்டி பல எதிர்ப்புகள், பல போராட்டங்களை என சந்தித்து நேற்று கோவிலாக உருப்பெற்றுள்ளது அயோத்தி ராமர் கோவில்.
இனி வரும் இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வாக அமையவுள்ள இந்த இந்த சம்பவம், இந்தியாவை தாண்டி பல நாடுகளிலும் எதிரொலித்தது. இந்து மதத்தினரை தாண்டி பல தரப்பட்டவர்களும், ராமர் கோவில் குறித்து நேற்று தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வந்த வண்ணம் இருந்தனர்.
வார்னர் பதிவு
அப்படி, ஒரு பதிவு தான் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பதிவு. கடந்த சில ஆண்டுகளாகவே, இந்திய திரையுலகில் ட்ரெண்ட்டிங்காக இருக்கும் விஷயங்கள் குறித்து சமூகஊடகங்களிலும், IPL போட்டிகளிலும் போதும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் டேவிட் வார்னர்.
அதன் ஒரு நீட்சியாகவே இந்த பதிவையும் நாம் எடுத்துக்கொள்ளலாம். ஜெய் ஸ்ரீ ராம் இந்தியா என குறிப்பிட்டு, ராமர் படத்தை அவர் வெளியிட்டுள்ளது மதச்சார்பின்மையை தாண்டி கிரிக்கெட்டை நேசிக்கும் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தையும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.