மறக்கவே மாட்டேன் - 5 வருஷத்துக்கு முன்னாடி ஆஸ்திரேலியா அணி பண்ணத..! டேவிட் வார்னர்

David Warner Australia Cricket Team Steven Smith
By Karthick Jan 22, 2024 01:27 AM GMT
Report

பெரும் அதிர்ச்சியை கொடுத்த ball tampering விவகாரம் குறித்து டேவிட் வார்னர் பேசியுள்ளார் 

ball tampering 

கடந்த 2018-ஆம் ஆண்டு ball tampering சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலியா அணிகளின் ஜாம்பவான்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஒரு வருடம் விளையாட தடையும், ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டனாகும் பொறுப்பு நிரந்தரமாக டேவிட் வார்னருக்கு தடை விதிக்கப்பட்டது.

david-warner-recalls-the-incident-of-ball-tamper

கிரிக்கெட் உலகை அதிரவைத்த இந்த சம்பவங்கள் குறித்து ஒய்வு பெற்றுள்ள டேவிட் வார்னர் நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து பேசும் போது, அணியின் கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்? என்று கேள்வியை எழுப்பி, உண்மையில் பயிற்சியாளருக்கு அணிகள் நிறைய பொறுப்புகள் உண்டு என்றும் உண்மையில் இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை என்றார்.

வேதனை

ஐந்து வருடங்கள் ஆனபோதிலும் இதற்கு என்ன பதில் சொல்வது என்று இன்னும் நான் கற்றுக் கொள்ளவில்லை என தெரிவித்த வார்னர், இது எனக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது என குறிப்பிட்டார்.

david-warner-recalls-the-incident-of-ball-tamper

இப்பொழுது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அனுமதித்தால் ஆஸ்திரேலியா அணிக்கு தன பயிற்சியாளராக முடியும் என்று சுட்டிக்காட்டிய வார்னர், ஆனால் என்னால் ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன் மட்டும் ஆக முடியாது என்று வேதனையுடன் குறிப்பிட்டார். இது எப்படியான முடிவு என்று எனக்கு தெரியவில்லை என்று தெரிவித்து, இது மிகவும் வினோதமான ஒன்று ஆஸ்திரேலியா அணி நிர்வாகத்தின் முடிவை சாடி இருக்கிறார் டேவிட் வார்னர்.