பிரபல கிரிக்கெட் வீரரின் மகள் இறப்பா? உண்மை என்ன?

Cricket Viral Photos Death
By Sumathi Oct 09, 2022 05:12 AM GMT
Report

கேன்சர் காரணமாக இறந்த அந்த சிறுமி டேவிட் மில்லரின் மகள் இல்லை என்று தெரியவந்துள்ளது.

டேவிட் மில்லர்

தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர். இவர் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறுமியுடன் இருக்கும் படங்களை பகிர்ந்து, அந்த சிறுமி இறந்ததாக கேப்ஷனும் இட்டார். இந்த படங்கள் சமூக வலைதலங்களில் வைரலானது.

பிரபல கிரிக்கெட் வீரரின் மகள் இறப்பா? உண்மை என்ன? | David Miller Daughter Passed Away

பலரும் அது டேவிட் மில்லரின் மகள் என்றும், அவருக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர் பதிவிட்ட அந்த சிறுமி, டேவிட் மில்லரின் மகள் இல்லை என்பதும், அந்த சிறுமி, டேவிட் மில்லரின் மிக பெரிய ரசிகை என்பதும் தெரியவந்துள்ளது.

மகள் இறப்பா?

அந்த சிறுமி புற்றுநோயை எதிர்கொண்டு வந்ததும், நேற்று அந்த சிறுமி இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. டேவிட் மில்லர் தற்போது இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறார்.

இன்று நடக்கும் இரண்டாவது ஒரு நாள் போட்டி ராஞ்சியில் பகல் 1.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது. முதல் போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்காவிடம் தோற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் வெல்லும் முனைப்பில் இந்தியா களமிறங்குகிறது.