ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியின் மகள் - இளைஞர் வெறிச்செயல்!
கள்ளக்காதலியின் மகளை, இளைஞர் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
சென்னை, பூந்தமல்லியைச் சேர்ந்தவர் அம்சவல்லி(40). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாட். இவரது மகள் சங்கீதா(18). 4 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து, தாயும் மகளும் வசித்து வந்தனர்.
இந்நிலையில், அம்சவல்லிக்கு, அதே பகுதியில் வசித்து வரும் உளுந்தூர் பேட்டை ராஜூ(38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அடிக்கடி அம்சவல்லி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது காதலியின் மகள் மீது ராஜூவுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடன் அன்பாக பழகியுள்ளார்.
கொடூரம்
தொடர்ந்து அம்சவல்லி வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்று, அவரது மகளை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார். உடனே சங்கீதா மறுப்பு தெரிவித்து கடுமையாக திட்டியுள்ளார். அப்போது போதையில் இருந்த ராஜூ ஆத்திரத்தில்,
அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மேலும் அங்கிருந்து மும்பைக்கு தப்பிச் சென்றுள்ளார். அதனையடுத்து தனிப்படை அமைத்து ராஜுவை கைது செய்து விசாரித்ததில் அவர் ஏற்கனவே குற்றவழக்கில் தொடர்புடையவர் என்பதும், சங்கீதாவை கொன்று தனது ஆசையை தீர்த்துக் கொண்டதும் தெரியவந்தது.