வீட்டில் தனியாக இருந்த மருமகள்; ஆசிட் பாட்டிலுடன் வந்த மாமனார் - மிரட்டி பாலியல் வன்கொடுமை!
மருமகளை மாமனார் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
சென்னை அழ்வார்திருநகரை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் 21 வயதான இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 வயது மகனும் உள்ளான். திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இளம்பெண்ணின் கணவர் பெயிண்டர் என்பதால் தினமும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில்தான் வீடு திரும்புவார். இதனிடையெ, மகனுக்கு திருமணம் முடிந்த நாளிலிருந்தே மருமகள் மீது மாமனார் சரவணன் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், தனது 2 வயது மகனுடன் மருமகள் மீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மாமனார் சரவணன் ஆசிட் பாட்டில் மற்றும் பிளேடு ஆகியவற்றை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது, திடிரென வீட்டுக்குள் புகுந்த அவர் கதவை பூட்டிக்கொண்டு மருமகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
மருமகள் - மாமனார்
இதனால் அதிர்ச்சி அடைந்த மருமகள் மாமனாரிடமிருந்து தப்பிக்க முயன்றார். அந்த சமயத்தில் மறைத்து வைத்திருந்த ஆசிட் மற்றும் பிளேடை எடுத்துகாட்டி, தான் சொல்லும்படி ஒத்துழைக்காவிட்டால் ஆசிட்டை ஊற்றி பிளேடால் வெட்டிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
மருமகள் என்று கூட பாராமல் சரவணன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பிறகு இந்த விஷயத்தை சரவணன் யாரிடமும் வெளியில் சொல்லக்கூடாது என்று மருமகளை மிரட்டி விட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இது குறித்து கோயம்பேடு மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சரவணன் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.