கள்ளக்காதலை கண்டித்த மாமனார்-மாமியார் - முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்த மருமகள்!
கள்ளக்காதலை கண்டித்த மாமனார், மாமியாரை மருமகள் விஷம் வைத்து கொன்றுள்ளார்.
தகாத உறவு
கடலூர், இலங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன்(39). இவர் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் பூமாலை என்பவரின் மகள் கீதாவை திருமணம் செய்துள்ளார்.
திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கீதாவுக்கு ஹரிஹரன்(44) என்பவருடன் திருமணம் கடந்த உறவு ஏற்பட்டு இருவரும் பழகி வந்தனர். இதனை அறிந்த கீதாவின் மாமியார் ஜெயந்தியும், மாமனார் சுப்பிரமணியனும் இதனைக் கண்டித்துள்ளார்கள்.
மருமகள் ஆத்திரம்
இதில் ஆத்திரமடைந்த கீதா, கணவரின் சொந்த ஊருக்குச் சென்று அங்கு தனது மகன்கள், கணவர், மாமனார், மாமியார் ஆகியோருக்கு முள்ளங்கி சாம்பார் வைத்து அதில் எலி பேஸ்ட் விஷத்தினை கலந்து மாமனார் மற்றும் மாமியார் இருவருக்கும் சாப்பிடக் கொடுத்துள்ளார்.
இதனை சாப்பிட்ட மாமியார், மாமனார் மற்றும் நித்தீஸ்வரன்(10) ஆகிய மூவருக்கும் உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்துவிட்டனர்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஒன்றரை ஆண்டுகள் கழித்து கீதா மற்றும் அவருடைய காதலனையும் கைது செய்துள்ளனர்.