மாமியாருடன் சண்டை - இரவில் ஆசிரியை செய்த பகீர் செயல்!
மாமியார் திட்டியதால் மனம் உடைந்த பெண் விபரீத முடிவை எடுத்துள்ளார்.
மாமியாருடன் தகராறு
கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (34). மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் வேலை பார்த்தார். அப்போது அவருக்கு லேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், வீட்டு வேலைகளை மருமகள் லேகா சரியாக செய்யவில்லை என மாமியார் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் லேகா கடும் மனஉளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
பெண் தற்கொலை
இதனால் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென சேலையால் தூக்குப்போட்டுள்ளார். வீடு திரும்பி இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாமியார் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் வீட்டில் வந்து விசாரணை நடத்தினர். அதில், மாமியார் திட்டியதால் மருமகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.