காதலனை விரட்டிவிட்டு இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீஸ்!
இளம் பெண்ணிடம் போலீஸ்காரர் சில்மிஷம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் சில்மிஷம்
காரைக்காலில் கடற்கரைக்கு வந்த ஒரு இளம் காதல்ஜோடியை, அப்போதைய ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் ராஜ்குமார்(35) என்பவர் போலீஸ் பூத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது உடன் வந்த காதலனை, அருகில் கடையில் சென்று தண்ணீர் வாங்கி வருமாறு அனுப்பிவிட்டு, அவரின் காதலியான இளம்பெண்ணை மிரட்டி பணம் கேட்டதாகவும், மேலும் உடலில் கை வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
பணிநீக்கம்
தொடர்ந்து அந்த இளம்ஜோடி உறவினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, பெரிய விவகாரமானது. இதனால், அப்போதைய மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ், காதல்ஜோடியை மிரட்டிய போலீஸ்காரர் ராஜ்குமாரை, பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.