தாயை கவனிக்க தவறிய மகள் - உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
தனது தாயை பராமரிக்க தவறியதால் சென்னை உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சொத்து
திரூப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் ராஜம்மாள். இவர் தமக்கு சொந்தமான சுமார் மூன்று ஏக்கர் நிலத்தை கடந்த 2016ம் ஆண்டு தனது மகளான சுகுனாவிற்கு எழுதி வைத்தார்.
உறுதியளித்தப்படி மகள் தம்மை கவனிக்காததால், பத்திர பதிவை ரத்து செய்யக்கோரி ராஜம்மாள் உடுமலைப்பேட்டை தாலுகா வருவாய் அதிகாரியிடம் மனு அளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட வருவாய் அலுவலர் அந்த பத்திரத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.
நீதிபதி உத்தரவு
இந்நிலையில், அவரது மகள் சுகுணா சார்பில் சென்னை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு வந்த பொழுது நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் விசாரித்தார், அப்பொழுது தாயை பராமரிப்பதாக கூறியதாலேயே சுகுணாவிற்கு சொத்து எழுதி வைக்கப்பட்ட நிலையில் அந்த நிபந்தனையை அவர் மீறியதால் சொத்து பத்திரம் ரத்து செய்யப்பட்டதாக வருவாய் அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணைக்கு பின்னர் சட்டப்படி சொத்து பாத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது, அதனால் வருவாய் அலுவலர் எடுத்த முடிவில் தலையிட தேவையில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளார்.