கள்ளக்காதலுக்கு குறுக்கே நின்ற தந்தை.. கோபத்தில் மகள் செய்த காரியம் - அதிர்ச்சி!
பெண் ஒருவர் கள்ளகாதலருடன் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடல்நல குறைவு
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, இவர் தள்ளுவண்டியில் அப்பள வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் 26 வயதான காஞ்சனா தேவி 26. இவர் சோலைராஜ் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகளுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார்.
இவரது மனைவி காஞ்சனாவிற்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது, அதனால் சிகிச்சை பெறுவதற்கு அவரது தாய் வீட்டிற்கு இவரது குழந்தைகளுடன் அனுப்பி வைத்தார். அப்பொழுது காஞ்சனாவின் அப்பாவின் அப்பள கடையில், செந்தில் என்பவர் வேலை பார்த்து வந்தார். அவ்ருடன் காஞ்சனாவிற்கு பழக்கம் ஏற்பட்டது.
கள்ளக்காதல்
இந்நிலையில், இருவருக்கும் இருந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இது குறித்து அறிந்த அவரது தந்தை மாரிமுத்து பல முறை கண்டித்துள்ளார். இவர்களது காதலுக்கு தந்தை குறுக்கே நிற்பதால் அவர் வாடகைக்கு வீடு வாங்கி குழந்தைகளுடன் சென்றுவிட்டார். அப்பொழுது, மகள் மற்றும் பேரக்குழந்தைகளை பார்ப்பதற்காக இவர் அடிக்கடி சென்று வந்தார்.
அப்பொழுது ஒரு நாள் அவரது வீடு பூட்டிக்கிடந்தது, இதனால், பக்கத்துவீட்டில் காஞ்சனா குறித்து விசாரித்தபோது, அவர் வீட்டை காலி செய்துவிட்டு சென்று விட்டதாக கூறியிருக்கிறார்கள்.
உடனே அவர் போன் செய்தபோது, "இனிமேல் தன்னை தேடி வரவேண்டாம், செந்திலுடன் குடும்பம் நடத்த கிளம்பிவிட்டேன்" என்று கூறியுள்ளார். இவர் காவல் நிலையத்திற்கு சென்று மாயமான தன் மகளையும், பேரக்குழந்தைகளையும் கண்டுபிடித்து தர வேண்டும் என்று புகாரளித்துள்ளார்.