அப்பா குடியை நிறுத்தணும், மண அழுத்தத்தால் சிறுமி விபரீத முடிவு - உருக்குலைந்த குடும்பம்!

Tamil nadu Death
By Vinothini Jun 04, 2023 02:09 PM GMT
Report

வேலூரில் ஒரு சிறுமி தனது தந்தையின் குடிப்பழக்கத்தினால் பாதிக்கப்பட்டு செய்த காரியம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடிப்பழக்கம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள ராஜாகுப்பம் ஊராட்சியில் சின்னராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபு.

இவரின் மனைவி கற்பகம். இவர்களுக்கு 17 வயதில் பிரகாஷ் என்ற ஒரு மகனும், 16 வயதில் விஷ்ணுபிரியா என்ற ஒரு மகளும் இருந்தனர்.

daughter-commits-suicide-for-her-drunkard-father

பிரகாஷ் ப்ளஸ் டூ முடித்துவிட்டு, மேற்படிப்பைத் தொடரவிருக்கிறார். விஷ்ணுபிரியா, சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 410 மதிப்பெண்கள்பெற்று, ப்ளஸ் ஒன் செல்லவிருந்தார்.

இவர்களின் தந்தை தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு செல்லுவார், மேலும் குடிப்பதற்கு பணம் வேண்டும் என்று மனைவியை தொல்லை செய்துள்ளார்.

பிறகு இரவு கடை மூடும் முன்னர் இன்னொரு பாட்டிலை வாங்கி குடித்துவிட்டு விடிய விடிய ரகளை செய்துள்ளார்.

விபரீதம்

இந்நிலையில், அவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவரும் தூங்காமல் மனஉளைச்சலுக்கு ஆளாகினர்.

இதனால் அவரது மகள் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் அவரது தாயின் புடவையை எடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வீடு திரும்பிய குடும்பம் இதனை கண்டு கதறி அழுதனர்.

daughter-commits-suicide-for-her-drunkard-father

மேலும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அப்போது மருத்துவர்கள் அவர் உயிர் பிரிந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவர் தற்கொலை செய்துகொண்ட அறையில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது.

அதில் அவர், "என் மரணத்துக்கு யாரும் காரணமில்லை. என் ஆசை, என் அப்பா குடியை நிறுத்த வேண்டும்.என் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்கிறேனோ, அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும்" என்று உருக்கமாக எழுதியிருந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.