தற்கொலை செய்து கொண்ட தாய் - சடலத்துடன் மகள் சாலையில் செய்த செயல்!

India Telangana Death
By Swetha Aug 19, 2024 07:00 AM GMT
Report

தாயின் சடலத்துடன் சிறுமி பிச்சை எடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய் சடலம்

தெலுங்கானா மாநிலம் தன்னூர் மண்டலத்தில் உள்ள ஒரு கிரமத்தை சேர்ந்தவர் கங்காமணி (35). இவரது கணவர் 12 வருடங்களுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார். இந்த சூழலில், விவசாய தினக்கூலியாக வேலை செய்து தனது ஒரே மகளான துர்காவை(11) வளர்த்து வந்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட தாய் - சடலத்துடன் மகள் சாலையில் செய்த செயல்! | Daughter Begs For Funeral Expens With Mothers Body

துர்கா பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் துர்காவை கங்காமணி கண்டித்து பேசியுள்ளார். இதனால் துர்கா கோபித்துக்கொண்டு தனது பெரியம்மா வீட்டுக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார்.

காப்பி அடித்து சிக்கி கொண்ட மருத்துவ மாணவி - மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

காப்பி அடித்து சிக்கி கொண்ட மருத்துவ மாணவி - மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

மகள் சாலையில்

ஆனால் வீட்டில் சீலிங் காத்தாடியில் தாய் கங்காமணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தனது தாயை கண்டு துர்கா செய்வதறியாது திகைத்துள்ளார். பிறகு இது குறித்து துர்கா அக்கம் பக்கத்தில் கூறவே, அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட தாய் - சடலத்துடன் மகள் சாலையில் செய்த செயல்! | Daughter Begs For Funeral Expens With Mothers Body

இந்த நிலையில், தாயின் இறுதிச்சடங்கிற்குப் பணம் இல்லாததால் வீட்டின் முன் இருந்த வீதியில் தாயின் சடலத்தை வைத்து இறுதிச்சடங்கு செலவுக்கு காசு வழங்கும்படி வருவோர் போவோரிடம் யாசகம் கேட்டுள்ளார். இதனை அறிந்த உள்ளூர் போலீஸ் சிலரும்,

துர்காவின் ஆசிரியர்களும், பிஆர்எஸ் முன்னாள் அமைச்சர் கேடிஆர் அருவுறுத்தலின்பேரில் அப்பகுதியை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் சிலர் காசு வழங்கி கங்காமணியின் இறுதிச் சடங்கை செய்ய உதவியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.