தாய்க்கு 2வது திருமணம்; நிகழ்ச்சி அரங்கிலேயே சம்மதம் வாங்கிய மகள் - வைரல் காட்சி!
மகள் தனது தாய்க்கு 2வது திருமணம் செய்ய சம்மதம் வாங்கிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
தமிழா தமிழா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ தமிழா தமிழா. ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
வார கடைசியில் ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் விவாதம் மேற்கொள்ளப்படும். அதன்படி, தற்போது இளமையாக தோற்றமளிக்கும் அம்மாக்கள் மற்றும் மகள்கள் என்ற தலைப்பில் பேசப்பட்டது.
2வது திருமணம்?
அதில் தீவிரமாக பேசுகையில், இளமையாக இருக்கும் தாய்க்கு மகள் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்கு கேட்டுள்ளார். ஆனால், அதனை தாய் மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், இதுவரை சம்மதம் தெரிவிக்காத தாய் மிழா தமிழா மேடையில் வைத்து சம்மதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.