ஒரே நபருடன் உறவில் தாயும், மகளும்..கொலையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Tamil nadu Attempted Murder Thoothukudi Relationship
By Sumathi Oct 18, 2022 11:22 AM GMT
Report
110 Shares

கணவர் தனது மனைவி, மகள் மற்றும் காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகாத உறவு

தூத்துக்குடி, அச்சங்குளம் கிராமத்தில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சென்று அந்த உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மீன் வியாபாரி ஞானசேகரன்(42) என்பது தெரிய வந்தது.

ஒரே நபருடன் உறவில் தாயும், மகளும்..கொலையில் வெளியான அதிர்ச்சி தகவல்! | Daughter And Mother Relationship With Same Person

அவர் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டின் அருகே கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ஞானசேகரன் மனைவிக்கும், கருப்பசாமிக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

கணவர் கொலை

மேலும், அவரது மூத்த மகளும் கருப்பசாமியும் காதலித்தும் வந்துள்ளனர். கள்ளக் காதல் குறித்து அறிந்த கணவர் மனைவியை கண்டித்து தாக்கியுள்ளார். ஆனால் மனைவி, தனது மூத்த மகளிடம் உனது காதல் விவகாரம் அப்பாவுக்கு தெரிந்துவிட்டதாகவும்,

அவர் இருக்கும் வரை நீ கருப்பசாமியை திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் சொல்லி ஞானசேகரை கொலை செய்ய மகளை நிர்பந்தித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ஞானசேகரின் வாயை பொத்தி இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு

உடலை சாக்கு பையில் கொண்டு சென்று காட்டுப்பகுதியில் எரித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்ததில் கருப்பசாமி, மனைவி மற்றும் அவரது 15 வயது மகளும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்களை கைது செய்து மூன்று பேரையும் வெவ்வேறு சிறையில் அடைத்தனர்.