டேட்டிங் ஆப்பில் பழக்கம்.. காதலனை நம்பி ரூமுக்கு சென்ற பெண் - அடுத்து நடந்த கொடூரம்!
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மாயமான இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
இளம்பெண்
கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்தவர் அந்த இளம்பெண். இவருக்கு டேட்டிங் ஆப் மூலம் நிகால் உசேன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்துகொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர்.
இதில் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. அதோடு அந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாகவும், நிகால் உசேன் கூறியுள்ளார். அதை நம்பிய இளம்பெண் அந்த நபர் ஓட்டலுக்கு அழைத்ததும் இவர் சென்றுள்ளார்.
இந்த நிலையில், ஓட்டலில் வைத்து இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நிகால் உசேன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
கொடூரம்
இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார். அதில், எனக்கும், நிகால் உசேனுக்கும் கடந்த மார்ச் மாதம் டேட்டிங் செல்போன் செயலி மூலமாக பழக்கம் ஏற்பட்டது.
என்னை திருமணம் செய்வதாக கூறி ஓட்டல் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து சென்றார். குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை பாலியல் வன்கொடுமை செய்ததால் நான் கர்ப்பம் அடைந்தேன்.
அதையடுத்து எனது கர்ப்பத்தை கலைத்து விட்டு தற்போது திருமணம் செய்ய நிகால் உசேன் மறுப்பதாக கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிய நிகால் உசேனை வலைவீசி தேடிவருகின்றனர்.