மாணவிகளிடம் Double meaning பேச்சு.. அத்துமீறிய ஆசிரியர் - பள்ளியில் நடந்த கொடூரம்!
மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசிரியருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது .
பாலியல் வன்கொடுமை
சென்னை கே.கே.நகரில் செயல்பட்டு வந்த தனியார்ப் பள்ளியில் ராஜகோபாலன் என்பவர் வணிகவியல் ஆசிரியராக உள்ளார்.
இவர் வகுப்பறையில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தங்களுடன் பேசுவது, மாணவிகளின் உடல் அமைப்பு குறித்துப் பேசுவது, உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த 8 மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாகக் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆசிரியர் ராஜகோபாலன் மீது சென்னை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றம் அதிரடி
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செல்போன், லேப்-டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது . இதனைத் தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அந்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனைத் தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுதலையானார். இந்த நிலையில் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது . இதனை நீதிபதி எம்.ராஜலட்சுமி விசாரித்தார் .
அப்போது ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டது.
மேலும் 8 மாணவிகள் அளித்த புகாருக்கு தலா 2 ஆண்டுகள் வீதம் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பு அளித்தார் .