பாலில் ஊறவைத்த பேரீச்சம் பழம்: இவ்வளவு நன்மைகளா - பாலியல் உறவு முதல் மலச்சிக்கல் வரை..
பாலில் ஊறவைத்த பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரியுமா?
பேரீச்சம் பழம்
பேரீச்சம் பழம் மற்றும் பால் தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவெல்லாம் எனப் பார்க்கலாம். பாலில் ஊறவைத்த பேரீச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வர இரும்பு சத்து அதிகரிக்கும்.
பாலில் ஊறவைத்த பேரீச்சம் பழத்துடன் 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் இருமல் நீங்கும். 2 அல்லது 3 பேரீச்சம் பழத்தை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்தால் மலச்சிக்கல் நீங்கும்.
நன்மைகள்
உணவிற்கு பின் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை சீராகும். காலையில் பேரீச்சம்பழம் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவரும். மிதமான வெந்நீரில் பேரீச்சம் பழம் சேர்த்து குடித்தால் நல்ல தூக்கத்தை தரும்.
பாலில் ஊறவைத்த பேரீச்சம் பழத்தை தினமும் மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு பால் சுரப்பு அதிகமாகும்.
இரவில் பேரீச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து காலையில் குடித்தால் ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனைகள் சீராகும்.