ரூ.14 கோடி ஏலம்: எனது மகள்கள் பிடித்த வாழ்க்கையை வாழ்வார்கள் - மிட்செல் உருக்கம்!
ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதால் தனது 2 மகள்களும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வார்கள் என்று டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.
டேரில் மிட்செல்
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல்லை ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

இந்நிலையில், ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதால் தனது 2 மகள்களும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வார்கள் என்று டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் "நான் ஏலத்தில் எடுக்கப்பட்ட அன்று என் பெரிய மகளின் 5வது பிறந்தநாள்.
நெகிழ்ச்சி பேச்சு
நான் மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருப்பது என் மகள்களுக்கு இப்போது புரியாது.இந்த தொகை என் குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். எனது 2 மகள்களும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வார்கள்.

எனக்கு அது போதும். என் மனைவியுடன் அமர்ந்து முழு ஏலத்தையும் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஐபிஎல் ஏலத்தில் என் பெயர் வருவதை பார்ப்பதும், கடைசிவரை படப்படப்பாக இருந்ததையும் மறக்க முடியாது.
கடந்த ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாமல் போன பிறகு, இந்த முறை இந்த வெற்றியை அனுபவிப்பது மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கிறது" என்று டேரில் மிட்செல் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan