அட கடவுளே.. 20 கார்களை அலேக்கா தூக்கி சென்ற சூறாவளி - வைரலாகும் வீடியோ!

Viral Video Greece World Cyclone
By Vinothini Sep 07, 2023 06:35 AM GMT
Report

சூறாவளியால் பல கார்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்படும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

இயற்கை சீற்றம்

கிரீஸ் நாட்டின் வடக்கே சில நாட்களுக்கு முன் காட்டுத்தீயால் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. அங்கு கடந்த திங்கட்கிழமையில் இருந்து டேனியல் என்ற சூறாவளியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.

daniel-cyclone-in-greece-dragged-cars-into-sea

பல இடங்களில் நிலச்சரிவு, பாலங்கள் இடிந்து விழுந்து மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து பல சேதாரங்கள் ஏற்பட்டுள்ளது.

வைரலாகும் வீடியோ

இந்நிலையில், வெள்ளத்தில் பல கார்கள் இழுத்து செல்லப்பட்டன. நாடு முழுவதும் சாலைகள், தெருக்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. கடற்கரையோர பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த எண்ணற்ற கார்கள் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டன.

இதில் 20-க்கும் மேற்பட்ட கார்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. தற்பொழுது, பெலியான் நகரில் ஏஜியோஸ் லோவன்னிஸ் பகுதியில், கார் ஒன்று சூறாவளி காற்றால் கடலுக்குள் இழுத்து செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.