100 பேரை பலி வாங்கிய சூறாவளி காற்று : அமெரிக்காவில் சோகம்

america citizen storm affects 100 died joe biden speaks
By Swetha Subash Dec 12, 2021 05:43 AM GMT
Report

அமெரிக்காவில் நேற்று நள்ளிரவில் அடித்த சூறாவளி காற்றில் பல வீடுகள் சேதமடைந்த நிலையில் பலி எண்ணிக்கை 100 -ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.

இதனை பேரிடர் மீட்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கென்டுக்கி, இல்லினாய்ஸ் உள்ளிட்ட 5 மாகாண பகுதிகள் இந்த சூறாவளி காற்றால் தாக்கப்பட்டு பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறது.

இதில் வணிக நிறுவனங்கள், பல வீடுகள் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. சாலைகளில் நிறுத்தப்பட்ட கார்களும் அள்ளி சூறையாடப்பட்டுள்ளது.

இந்த புயல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு மற்றும் சேதம் குறித்து முழுமையாக சொல்ல முடியவில்லை என்று கூறியிருக்கிறார் அதிபர் ஜோ பைடன்.

இல்லினாய்ஸ்சில் உள்ள அமேசான் வேர்ஹவுஸ் முழு சேதமுற்று அந்த கட்டடத்தில் பலர் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்கும் பணி தொடர்கிறது.

சில மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.கடந்த கால அமெரிக்காவில் சூறாவளி ஏற்படுத்திய சேதத்தில் 1925 ல் 747 பேரும் 2011ல் அதிகபட்சமாக 800 பேரும் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.