6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடன ஆசிரியர் - அடித்து வெளுத்த உறவினர்கள்!
பள்ளியில் நடன ஆசிரியர் ஒருவர் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை
சென்னை முகப்பேரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் அண்ணாநகர் கிழக்கு ஆர்.வி.நகரை சேர்ந்த வேணுகோபால் என்ற 41 வயது நபர் 5 ஆண்டுகளாக நடன ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அதே பள்ளியில் அண்ணா நகரை சேர்ந்த 6 வயது சிறுமி பயின்று வருகிறார், இந்த சிறுமியிடம் நடன ஆசிரியர் வேணுகோபால் தவறாக நடந்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இதனை அந்த சிறுமியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தனர்.
வெளுத்த உறவினர்கள்
இந்நிலையில், பள்ளி நிர்வாகம் அந்த நடன ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிந்தது. இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நாற்று முன்தினம் பள்ளிக்கு சென்று அந்த நடன ஆசிரியரை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர்.
தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த போலீஸார் வேணுகோபாலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.