‘100 சவரன் தராவிட்டால் உன் அந்தரங்க வீடியோ வெளியிட்டுவேன்...’ மிரட்டிய கணவன் - நடுங்க வைத்த சம்பவம்

arrest husband Intimate-video Intimidated Wife-complains
By Nandhini Feb 17, 2022 07:35 AM GMT
Report

சென்னை, மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வினோதா (28). இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு வினோதா தம்பி ஒரு நடன பள்ளியில் சேர்ந்துள்ளார். அந்த நடன பள்ளியில் பிரபு என்பவர் நடன ஆசிரியராக இருந்துள்ளார். வினோதாவின் தம்பியும், பிரபும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

இதனால், வினோதாவுடன் நட்பாக பழகியுள்ளார் பிரபு. நாளடைவில் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. தனது வளர்ப்புத் தாய்க்கு உடல்நிலை சரியில்லை. எனவே, கும்பிடிப்பூண்டியில் உள்ள வீட்டிற்கு செல்ல வேண்டும், நீயும் வா என்று கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் வினோதாவை தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், செல்லும் வழியில் வினோதாவிற்கு பிஸ்கட், கூல்டிரிங்ஸ் மயக்க மருந்து கொடுத்து மயக்கமடைய வைத்துள்ளார். அதன் பின் காரில், மயக்கமடைந்த வினோதாவிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வீடியோவாக பிரபு எடுத்துள்ளார்.

மயக்கம் தெளிந்ததும் வினோதாவிற்கு தான் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதை அறிந்தார். உடனே வினோதா பிரபு மீது போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் பிரபுவிடம் விசாரணை நடத்தியதில், வினோதாவை நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதனால், போலீசாரும் சமாதானப்படுத்தி இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை வினோதாவிடம் அடிக்கடிக்கு காட்டி மிரட்டி பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார் பிரபு. இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் பிரபுவின் தாய் ரேவதிக்கும் தெரிய வந்தது. இருவருக்கும் திருமணம் செய்ய அவர் முன் வந்துள்ளார். ஆனால் திருமணம் செய்ய வேண்டும் என்றால் நகை, பணம் வரதட்சணையாக தரவேண்டும் என்று வினோதாவிடம் கூறியிருக்கிறார்.

‘100 சவரன் தராவிட்டால் உன் அந்தரங்க வீடியோ வெளியிட்டுவேன்...’ மிரட்டிய கணவன் - நடுங்க வைத்த சம்பவம் | Intimate Video Intimidated Husband Arrest

இதனையடுத்து, ராயபுரத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து வைப்பதாக சொல்லி அங்கு சென்றனர். அங்கு வினோதா 80 ஆயிரம் ரூபாய் பணம் தாய் ரேவதியிடம் கொடுத்துள்ளார்.

சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற போது அங்கு வழக்கறிஞர் இன்னும் வரவில்லை என்று கூறி பக்கத்தில் இருந்த கோயிலுக்கு வினோதாவை அழைத்து சென்று தாலி கட்டாமல் மாலை மாற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் ரேவதி.

2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வினோதா கர்ப்பம் அடைந்தார். இதன் பிறகு தாலி கட்ட வேண்டும் என்று வினோதா கேட்க, 100 சவரன் நகையும், 10 லட்சம் ரூபாய் பணமும் கொடுத்தால் தான் தாலி கட்டுவேன் என்று கூறியுள்ளார் பிரபு. அப்படி தரவில்லை என்றால் உன் வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வினோதா கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். வழக்கை பதிவு செய்த போலீசார் பிரபுவை அதிரடியாக கைது செய்தனர்.

பிரபு இது போன்று வேறு எந்த பெண்களிடமும் நடந்து கொண்டு ஏமாற்றி இருக்கிறாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.