இன்னும் 3 நாள் தான் கேடு...இல்லனா!! லியோவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 1300 பேர்!!
விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்திற்கு எதிராக 1300 பேர் போர்க்கொடி தங்கியுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
லியோ
மாஸ்டர் படத்திற்கு பிறகு விக்ரம் என்ற மாபெரும் வெற்றியை கொடுத்த லோகேஷ், மீண்டும் விஜயுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார்.இன்னும் 10 நாட்கள் கூட படத்தின் வெளியீட்டிற்கு இல்லாத நிலையில், அண்மையில் வெளியான படத்தின் ட்ரைலர் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு அளித்துள்ளது.
அனிருத் இசையில் படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் என பலர் நடித்துள்ள இப்படம் பான் இந்திய திரைப்படமாக பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
கிளம்பிய பூதம்
எப்போதும் விஜய் படத்திற்கு வெளியீட்டின் போது எதாவது பிரச்சனை வருவது வழக்கமே. அதே போல தான், இம்முறையும் பிரச்சனை ஒன்று கிளம்பி இருக்கிறது. லியோ படத்தில் இடம்பெற்றுள்ள நான் ரெடிதான் பாடலுக்கு நடனம் ஆடிய 1,300 பேருக்கும் சம்பளம் வரவில்லை என நடன கலைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நான் ரெடிதான் பாடலுக்கு நடனமாடி 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் படக்குழு இன்னும் சம்பளம் வழங்கவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளனர். இன்னும் 3 நாட்கள் மட்டுமே கேடு வைப்பதாக தெரிவித்துள்ள அவர்கள், அதற்கு மேல் சென்றால் 1300 பேர் சேர்ந்து புகார் அளிப்போம் என்றும் தெரிவித்தார்.