பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை - வாயில் ஆசிட் ஊற்றி தீ வைத்த கொடூரம்
பட்டியலினப் பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்து, தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
ராஜஸ்தான், பார்மர் மாவட்டத்தில் வசித்த 30 வயது பெண் ஒருவர் வீட்டில் தனியே இருந்திருக்கிறார். பட்டியலினத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஷகுர் என்பவர் அத்துமீறி வீட்டில் நுழைந்து, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்திருக்கின்றனர். உடனே அந்த நபர் அங்கிருந்த அமிலம் போன்ற திரவத்தை அவர்மீது ஊற்றி, தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பியிருக்கிறார்.
தீ வைத்த கொடூரம்
உடனே அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 40 சதவிகிதம் தீக்காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து வழக்கு பதிவுசெய்த காவல்துறை குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த பெண் முன்னதாக, பாலியல் வன்கொடுமை செய்து அந்த இளைஞர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், பாத்ரூம் கழுவுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஆசிட்டை கொண்டு வந்து, வாயில் ஊற்றி தி வைத்து கொளுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.