ஓடும் காரில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - 8 மணிநேரமாக வெறிச்செயல்!
பெண்ணை காருக்குள் இழுத்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
பெங்களூரு, கோரமங்களாவில் என்ற இடத்தில் உள்ள தேசிய விளையாட்டு பூங்காவில் இரவு நேரத்தில், ஆண் நண்பர் ஒருவருடன் பெண் ஒருவர் பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒருவர், இருவரையும் அழைத்து இரவில் தனியாக பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அந்த ஆண் நண்பர் அங்கிருந்து சென்றுள்ளார். உடனே, அந்த நபர், மொபைல் மூலம் நண்பர்கள் 3 பேரை அழைத்துள்ளார். 3 பேரும் காரில் வந்தனர். அந்த பெண்ணை காரில் ஏற்றி நகர் முழுவதும் சுற்றி உள்ளனர்.
கொடூரம்
அப்போது 4 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் மறுநாள் அதிகாலையில் வீடருகே விட்டுவிட்டு சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளனர். அதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காயமடைந்ததால் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
அதன் பின் புகார் அளித்ததன் காரணமாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், சதீஸ், விஜய், ஸ்ரீதர், கிரண் என்ற 4 பேரையும் கைது செய்தனர். 2 பேர் தனியார் அலுவலகத்தில் தொழிலாளியாகவும், ஒருவர் கால் சென்டரிலும், மற்றொருவர் எலக்ட்ரீசியனாகவும் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.