தட்டு எடுத்து வராத தலித் சிறுவன்.. பிரம்பால் தாக்கி துரத்திய ஆசிரியை - கொடூரம்
தனியாக சாப்பிட தட்டு எடுத்து வராத தலித் சிறுவனை ஆசிரியை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீண்டாமை
உத்திரப்பிரதேசம், கான்பூர் பானி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனி தட்டில் உணவளிப்பது தான் வழக்கமாக இருந்துள்ளது. இதற்காக அவர்கள் வீட்டில் இருந்து தட்டு எடுத்து வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு 2ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுவன் தட்டு எடுத்துச் செல்லவில்லை. இவன் தலித் சமூகத்தைச் சார்ந்த சிறுவன் என்பதால் ஆத்திரமடைந்த ஆசிரியர் அவனை சரமாரியாக தாக்கி, பிரம்பால் அடித்து இழுத்துச் சென்று, பள்ளியில் இருந்து வெளியே தள்ளியுள்ளார்.
கொடூர செயல்
இதனால் பயந்த சிறுவன் வெளியே நின்று அழுதுள்ளான். இதனை கண்ட அவ்வழியாக சென்ற பெண் ஒருவர் சிறுவனிடம் விசாரித்துள்ளார். அவன் நடந்த கொடுமையை கூறியுள்ளான். உடனே அந்தப் பெண் அதனை வீடியோவாக எடுத்து இணைத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலர் கண்டங்களை தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.