பிரபல தாதா முக்தார் சிறையில் திடீர் மரணம்- விஷம் வைத்து கொல்லப்பட்டாரா? வெடிக்கும் சர்ச்சை!

Uttar Pradesh Death
By Swetha Mar 29, 2024 06:16 AM GMT
Report

சிறையில் இருந்த பிரபல தாதாவும், முன்னாள் எம்எல்ஏவுமான முக்தார் அன்சாரி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

தாதா முக்தார்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முக்தார் அன்சாரி(63) மிகவும் பிரபலமான தாதா ஆவார். இவர் தனது 17 வயதிலிருந்தே குற்ற செயல்களில் ஈடுபட்ட வந்தாதாகவும், இவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரபல தாதா முக்தார் சிறையில் திடீர் மரணம்- விஷம் வைத்து கொல்லப்பட்டாரா? வெடிக்கும் சர்ச்சை! | Dada Mukhtar Ansari Died In Jail

மௌசதார் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளார். அவர் மீதான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதன் காரணமாக நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்டு பாண்டா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இதை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் முக்தாருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை அருகில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார்.இந்த தகவல் அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.

பிரமாண்டமாய் வாழ்ந்த தொழிலதிபர் குடும்பம்; விரக்தியில் தற்கொலை - உருக்கமான கடைசி கடிதம்!

பிரமாண்டமாய் வாழ்ந்த தொழிலதிபர் குடும்பம்; விரக்தியில் தற்கொலை - உருக்கமான கடைசி கடிதம்!

திடீர் மரணம்

இதையடுத்து, அவருக்கு லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தினர். ஆனால், சிறை நிர்வாகம் அதற்கு அனுமதிக்காமல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, அவரை மீண்டும் சிறைக்கு கொண்டு சென்றனர்.

பிரபல தாதா முக்தார் சிறையில் திடீர் மரணம்- விஷம் வைத்து கொல்லப்பட்டாரா? வெடிக்கும் சர்ச்சை! | Dada Mukhtar Ansari Died In Jail

இந்த நிலையில் முக்தார் அன்சாரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக நேற்று அவர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவரை போலி என்கவுன்டர் செய்யப்போவதாக குடும்பத்தினருக்கு தகவல் வந்த நிலையில், சிறைக்குள் அவருக்கு விஷம் கலந்த உணவு வழங்கியதாகவும், அதனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் அன்சாரியின் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். 40 நாட்களுக்கு முன்பே விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டது என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.