பேரழிவு; அரபிக்கடலில் உருவான புதிய புயல் - தமிழகத்திற்கு ஆபத்து?

Tamil nadu TN Weather
By Sumathi Jun 07, 2023 03:56 AM GMT
Report

அரபிக் கடலில் பைபோர்ஜாய் (Biporjay) புயல் உருவாகியுள்ளது.

பைபோர்ஜாய்

அரபிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற்றுள்ளது. இதற்கு பைபோர்ஜாய் என பெயரிடப்பட்டுள்ளது. அதற்கு பேரழிவு என்று அர்த்தமாகும். இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

பேரழிவு; அரபிக்கடலில் உருவான புதிய புயல் - தமிழகத்திற்கு ஆபத்து? | Cyclone Formed In Arabian Sea Rain Alert Chennai

புயல் கோவாவுக்கு மேற்கு - தென்மேற்கு திசையில் 900 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தென்மேற்கே ஆயிரத்து 100 கிலோ மீட்டர் தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயல், வடக்கு நோக்கி செல்கிறது.

தமிழகத்திற்கு ஆபத்து?

இதனால், தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அரபிக் கடல் பகுதியில் மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அடுத்த 4 நாட்களுக்கு அரபிக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் உட்பகுதியில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக் கூடும். ஓரிரு இடங்களில் 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்.

அதேநேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக ஜூன் 10 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.