எச்சரிக்கை: கரையை கடக்கும் பைபர்ஜாய் புயல் - 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்!

Gujarat Weather
By Sumathi Jun 15, 2023 05:03 AM GMT
Report

பைபர்ஜாய் புயல் இன்று மாலை கரையை கடக்க உள்ளது.

பைபர்ஜாய் புயல்

அரபிக்கடலில் உருவாகியுள்ள பைபோர்ஜாய் புயல், குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே இன்று மாலை 4 மணி முதல் 8 மணிக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எச்சரிக்கை: கரையை கடக்கும் பைபர்ஜாய் புயல் - 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்! | Cyclone Biparjoy Gujarat Braces For Heavy Rain

புயல் கரையைக் கடக்கும் போது அதன் வேகம் மணிக்கு 125 முதல் 135 கிலோ மீட்டர் ஆக இருக்கும் என்றும் அதிகபட்சமாக 150 கிலோமீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கக் கூடும். இதற்கிடையில், ஜாம்நகர், துவாரகா, ராஜ்கோட் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது.

எச்சரிக்கை

அதனைத் தொடர்ந்து, புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதையொட்டி, கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த புயலானது, குஜராத்தின் ஜகாவ் துறைமுகத்தில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தென் - மேற்கு பகுதியில் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. மேலும், பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.