தீவிரம் காட்டும் பைபர்ஜாய் புயல் - தமிழகத்தை தாக்கும் வாய்ப்பு?

Tamil nadu Regional Meteorological Centre
By Vinothini Jun 09, 2023 07:57 PM GMT
Report

 தற்போது பைபர்ஜாய் புயல் தீவிரமாக நிலவியுள்ளது இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர பைபர்ஜாய் புயல் இன்று காலை 08:30 மணி அளவில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து,

biporjoy-cyclone-attack-in-tamilnadu

கோவாவில் இருந்து மேற்கே சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில், மும்பையில் நிலவியது. nஅடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையிலும் அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திற்கு பாதிப்பு

இதனை தொடர்ந்து, வானிலை ஆய்வு மையம் கூறுவது, இன்னும் 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

biporjoy-cyclone-attack-in-tamilnadu

மேலும், தமிழகம் உட்பட ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.