வெளுத்து வாங்க போகும் மழை - நாளை உருவாகிறது புதிய புயல்
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் 3-ந்தேதி புதிய புயல் உருவாகிறது. இந்த புயலுக்கு மோக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.
நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது,
தமிழக கடலோர பகுதிகளில் வணிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மேலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் நாளை (7-ந்தேதி ) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இது 8-ந் தேதி ( திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும்.
லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
இதன் காரணமாக இன்று முதல் 9-ந் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காலைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.