ஐஸ்வர்யா ராய் பெயரில் பாஸ்போர்ட்.. கோடி கணக்கில் மோசடி - பகீர்!
ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்வர்யா ராய்
உத்தரப் பிரதேசம், நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவருக்கு கேன்சர் நோய் உள்ள நிலையில், இந்த நோய்க்கு இயற்கை ஆயுர்வேத முறையில் மருந்துகளை தருகிறோம் என்று ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு பணம் பறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து புகாரளித்தார்.
அதன் அடிப்படையில், நைஜீரிய நாட்டை சேர்ந்த இருவர், கானா நாட்டை சேர்ந்த ஒரு நபரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், இணையத்தில் திருமண வரன் பார்க்கும் தளங்கள், டேட்டிங் தளங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் போலி அடையாளங்களை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
போலி பாஸ்போர்ட்
மேலும், போலி பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை தயாரித்து வைத்துள்ளனர். இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரிலும் இவர்கள் போலி பாஸ்போர்ட்டை உருவாக்கியுள்ளது தெரியவந்தது. அதனையடுத்து, அவர்களிடம் இருந்து 6 மொபைல் போன்கள்,
11 சிம் கார்டுகள், லேப்டாப்புகள், பிரின்டர்கள் போன்ற கருவிகளையும், 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணங்கள், ரூ.10.76 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.