குக் வித் கோமாளி புகழ் சிவாங்கிக்கு திருமணம் - அவரே போட்ட வைரல் பதிவு!
சிவாங்கி சமூக வலைதளம் குறித்து பகிர்ந்த பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
சிவாங்கி
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி.

அதன் பின்னர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார். இதனால் அவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. மேலும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.
தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று அசத்தினார். சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். மேலும் சில பாடல்கள் பாடி ரீல்ஸ் பகிர்வதும் வழக்கம்.
வைரல் பதிவு
இந்நிலையில், அவர் தனது Threads பக்கத்தில், சோசியல் மீடியாவை திறந்தாலே நான் யாருக்காவது திருமணம், நிச்சயம் முடிந்தது, கர்ப்பமாக இருப்பதையோ தான் பார்க்கிறேன்.

அந்த கட்டத்தில் தான் தற்போது நான் இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் திருமணமா? போன்ற கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.
68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதிய நடிகர்... யார் இந்த தேசிய விருது பெற்ற நடிகர்னு தெரியுமா? Manithan