சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது தான் - நீதிபதி சரமாரி கேள்வி!
தமிழக முதல்வர் குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது மோசமானது என்று நீதிபதி கூறியுள்ளார்.
சி.வி.சண்முகம்
கடந்த 20233ம் ஆண்டு திண்டிவனத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். அப்போது முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து திண்டிவனம் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த சூழலில் நிலுவையில் வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு இருந்தால் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின்மீது அரசு தான் புகார் அளித்திருக்க வேண்டும்.
ஆனால் ஏன் திமுக நிர்வாகி புகார் அளித்தார் என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி அவர் பேச்சு மோசமானது தான். அவரது பேச்சை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவும் இல்லை என கூறி வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.