குண்டுவெடிப்புல இல்ல கவனம்.. நயன்தாரா விஷயத்தில்தான் - அரசை சாடிய சி.வி.சண்முகம்

Nayanthara Tamil nadu Coimbatore DMK
By Sumathi Oct 29, 2022 07:53 AM GMT
Report

குண்டுவெடிப்பில் கவனம் செலுத்தாத அரசு, நயன்தாரா குழந்தை விவகாரத்தில் செலுத்துவதாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சி.வி.சண்முகம் 

விழுப்புரம், அகூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

குண்டுவெடிப்புல இல்ல கவனம்.. நயன்தாரா விஷயத்தில்தான் - அரசை சாடிய சி.வி.சண்முகம் | Cv Shanmugam Says About Dmk Party

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தீவிரவாதம் தலை தூக்கி வருகிறது. இதற்கு கோவை வெடிகுண்டு சம்பவம் என்பது ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும்.

திமுக அரசு

ஆனால் அதைப் பற்றி சிந்திக்காமல் மக்களுடைய அச்சத்தை போக்காமல் இந்த அரசு முன்னுக்கு முரணான பதில்களை கூறி வருகிறது. இதை வைத்து அரசியல் செய்து வருகிறது. கோவை வெடிகுண்டு குறித்த அச்சத்தை மக்களிடம் இருந்து போக்குவதை தவிர்த்து அதிதீவிரமாக

நயன்தாரா சட்டத்திற்கு உட்பட்டு குழந்தை பெற்றுக் கொண்டாரா என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.