முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு சோளக்காட்டு பொம்மை - சி.வி.சண்முகம் கடும் விமர்சனம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு சோளக்காட்டு பொம்மை என மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்கூட்டம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 51 வது பொன்விழா தொடக்க விழாவை முன்னிட்டு, கடலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பாக, விருத்தாச்சலம் வானொலி திடலில், மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சுமார் 3,000-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்ட கூட்டத்திற்கு, கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித் தேவன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
முதலமைச்சர் சோளக்காட்டு பொம்மை
அப்போது பேசிய சி.வி.சண்முகம் அதிமுக இயக்கம் தொடங்கப்பட்டதற்கு முக்கிய காரணம், கருணாநிதி என்ற தீய சக்தியை அழிப்பதற்காக, தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என கூறினார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50 ஆண்டுகால வரலாற்றில், 32 ஆண்டுகள் ஆட்சி கட்டில் அமர்ந்துள்ள மாபெரும் இயக்கமாக உள்ளது என கூறினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக இயக்கத்தை பிளவு படுத்தி விடலாம் என கனவு காண்பதாகவும், அதிமுக இயக்கத்தால் உருவாக்கப்பட்ட கருங்காலி ஓபிஎஸ் உடன் திமுக இணைந்து, அழித்துவிடலாம் என நினைக்க வேண்டாம் என்றும், தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக என்று எச்சரிக்கை விடுத்தார்.
முதலமைச்சராக ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த, அதிமுகவின் கோவிலாக இருக்கக்கூடிய தலைமைக் கழகத்தை, திமுகவுடன் இணைந்து, காவல்துறை துணையுடன் உள்ளே புகுந்து,
சூறையாடி சென்ற ஓபிஎஸ் ஒரு கருங்காலி, துரோகி என்றும், திமுகவிடம் இணைந்து அதிமுகவை முடக்கி விடலாம் என நினைப்பது முடியவே முடியாது.
திமுக ஆட்சி முடிவதற்கு, ஐந்து வருடம் காத்திருக்க தேவையில்லை என்றும், திமுக ஆட்சி எப்போது போகும் என திமுகவினரே புலம்புவதாக புகார் தெரிவித்தார்.
திமுக ஆட்சி வெளங்காது, உருப்படாது, ஒரே குடும்பம் கொள்ளையடிக்க பார்க்கிறது என திமுகவினர் சொல்வதாகவும் அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சி என்று கூறுவதாக தெரிவித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் காலையில் எழுந்திருப்பதும், பவுடர் அடிப்பதும், டோப்பாவுக்கு மை அடிப்பதிலும் பிசியாக உள்ளார் என்றும், நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல், நிர்வாக திறனற்ற தத்தி முதலமைச்சரை யாரும் பார்த்ததில்லை எனக்கு குற்றம் சாட்டினார்.
திமுக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சொல் புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை என்றும், அவர் ஒரு சோளக்காட்டு பொம்மை முதல்வர் என விமர்சனம் செய்தார்.
எழுதிக் கொடுத்தாலும் சரியாக படிக்கத் தெரியாத திமுக முதலமைச்சர் ஒரு இயந்திரம் என்றும்,
தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பவது அவரது குடும்பம் என்றும், ஸ்டாலின் மனைவி துர்கா, அவரது மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோர்தான் ஆட்சி நடத்துவதாகவும், தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சி என்று குற்றம் சாட்டினார்.