ஆளுக்கு ஒரு பொண்டாட்டி கூட தருவேன் - ஸ்டாலின் குறித்து சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு!
சி.வி. சண்முகம் சர்ச்சையாக பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சி.வி. சண்முகம்
விழுப்புரம் நகரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக விழுப்புரம் வடக்கு நகர பூத் பொறுப்பாளர்கள்,நகர நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
அப்போது ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், “திமுக ஆட்சியில் விழுப்புரம் நகராட்சியில் மக்களின் அடிப்படை தேவையான தண்ணீர், சாலைவசதி, மின்விளக்கு, சுகாதாரம் போன்ற எந்தவிதமான வேலையும் நடைபெறுவதில்லை. திமுக ஆட்சியில் கிட்னி திருட்டு நடைபெற்றுகொண்டு இருக்கிறது.
சர்ச்சை கருத்து
எனவே திமுக நடத்தும் முகாம்களுக்கு செல்லாதீர்கள். அவர்கள் உடலுறுப்புகளை திருடி சென்றுவிடுவார்கள். அப்படித்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. தேர்தலுக்கு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. எனவே ஸ்டாலினின் ஆட்சி காலம் இன்னும் மூன்று மாதங்கள்தான் உள்ளது.
பொங்கலுக்கு பிறகு ஸ்டாலின் வீட்டிற்கு சென்றுவிடுவார். மகளிர் உரிமைத்தொகை முன்பு தகுதியுடையவர்க்கு ஆயிரம் ரூபாய் தருவேன் என தெரிவித்த ஸ்டாலின் தற்போது அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்கிறார்.
இத்தனை ஆண்டுகாலம் எதும் செய்யாதவர் தேர்தல் வரவுள்ள காரணத்தினால் ஓட்டு வேணும் என்பதால் அனைத்து திட்டங்களையும் தருவேன் என கூறுவார். மேலும் ஆளுக்கு ஒரு பொண்டாட்டி தருவேன் என கூட கூறுவார்” என்றார். இந்த பேச்சு தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.