பேட்டி கொடுத்தா வேட்டியவே உருவிடு வாங்க : நழுவிய மதுரை ஆதீனம்
தொழில் வர்த்தக கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதுரை ஆதீனம், பேட்டி கொடுத்தா வேட்டியவே உருவி விட்ருவங்க என செய்தியாளர்களிடம் பதிலளித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆதீனம்
மதுரையில் வெள்ளாளர் மற்றும் முதலியார் சேம்பர் இணைந்து நடத்திய தொழில் வர்த்தக கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
பேட்டி கொடுத்தால் வேட்டியை உருவிடுவாங்க
குறிப்பாக இருசக்கர வாகனங்கள் சைக்கிள் பனை ஓலைகளால் செய்யப்பட்ட கலைப் பொருட்கள் சேலைகள் ஜவுளிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அரங்குகளில் வைக்கப்பட்டிருந்தன. இந்த தொழில் வர்த்தக கண்காட்சியை மதுரை ஆதீனம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ஒவ்வொரு அரங்கையும் பார்வையிட்ட மதுரை ஆதீனம் அங்கிருந்தவர்களுக்கு ஆசி வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்கள் மதுரை ஆதீனத்திடம் பேட்டி கொடுக்குமாறு கேட்டபோது, பேட்டி கொடுத்தால் வேட்டியை உருவிவிட்ருவங்க என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதீனம் பல்லக்கு நிகழ்ச்சி , முதலமைச்சர் முடிவெடுப்பார் : அமைச்சர் சேகர்பாபு

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan
