வங்கி லாக்கரில் இருந்த 11 சவரன் நகை மாயம்! விழிபிதுங்கிய அதிகாரிகள்- நடந்தது என்ன?
எஸ்பிஐ வங்கி லாக்கரில் இருந்து 11 சவரன் நகைகள் திருடு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாங்கி லாக்கர்
திருச்சி எடமலைப்பட்டியை சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனது சொந்த ஊரான எடமலைப்பட்டி புதூரில் அமைந்துள்ள எஸ்பிஐ வங்கியில் தனக்கென ஒதுக்கப்பட்ட லாக்கரில் 11 சவரன் நகைகளை வைத்து சென்றுள்ளார்.
அதற்கு ஆதராமாக நகைகளை வீடியோவாகவும் எடுத்து கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கலைச்செல்விக்கு வங்கியில் இருந்து அழைப்பு வந்துள்ளது அதில் அவரை அவரசமாக வாங்கிக்கு அழைத்துள்ளனர்.
அந்த பெண்ணிடம் அதிகாரிகள் லாக்கர் தவறுதலாக மாறியுள்ளது என்று பல காரணங்களை கூறி சமாளித்துள்ளனர். உடனே அங்கு வந்து பார்த்த கலைச்செல்விக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
நடந்தது என்ன?
அதாவது,தனக்கு கொடுத்த லாக்கர் 87 வயதுடைவர் லாக்கர் என்றும் மாறுதலாக அவருடைய லாக்கர் ஸ்பேர் கீ கொடுத்துவித்ததாகவும் கூறியுள்ளனர்.
சந்தேகத்தில் லாக்கரை திறந்து பார்த்தால் மற்றொரு அதிர்ச்சி, தான் வைத்த 11 சவரன் நகை பையை காணவில்லை. இதனை பார்த்த கலைச்செல்வி அனைவரிடமும் தனக்கு கொடுத்த லாக்கர் கீ மற்றுமொருவருக்கு எப்படி கொடுக்க முடியும் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நகை எப்படி திருட்டு போனது, யார் திருடியது என்று தெரியாமல் விழி பிழிந்து நின்றுள்ளனர் வங்கி அதிகாரிகள். தான் கஷ்டப்பட்டு சேர்த்த நகைக்கு எங்கே போனது என தெரியாமல் இருந்த கலைச்செல்வி இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும், போலீசார் இது குறித்து சம்மந்தப்பட்ட வாங்கி மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகினறனர்.