Thursday, May 1, 2025

வங்கி லாக்கரை திறந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் -எஸ்.பி.வேலுமணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

spvelumani dvac Raid
By Petchi Avudaiappan 4 years ago
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரைத் திறந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி கோவை மற்றும் சென்னையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர் மற்றும் நண்பர்களின் நிறுவனங்கள், இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையால் சோதனை நடத்தப்பட்டது.

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஓரே ஒரு வங்கியின் லாக்கர் சாவியை மட்டும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைப்பற்றினர். இந்நிலையில் இன்று குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரைத் திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்டனர்.

மேலும் லாக்கர் கடைசியாக எப்போது திறக்கப்பட்டது எனவும் வங்கி அதிகாரிகளிடம் அப்போது விசாரணை நடத்தப்பட்டது. அதேசமயம் வங்கி லாக்கரில் இருந்து ஏதேனும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.